கொரோனா வைரஸ்
3-வது அலை வந்தால் மிகப்பெரிய பாதிப்பு இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை: மா.சுப்பிரமணியன்
3-வது அலை வந்தால் மிகப்பெரிய பாதிப்பு இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை: மா.சுப்பிரமணியன்
கொரோனாவின் 3-ஆவது அலை வந்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாதிப்பில் இருந்து விடுபட்டுவிட்டோம் என்ற மனநிலையில் மக்கள் இருக்கக்கூடாது என கேட்டுக்கொண்டார். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கவே அரசு தளர்வுகள் அளித்து வருவதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.