”டெல்டாவும், ஒமைக்ரானும் சுனாமி வேகத்தில் பரவி வருகிறது ” - அமைச்சர் மா.சுப்ரமணியன்

”டெல்டாவும், ஒமைக்ரானும் சுனாமி வேகத்தில் பரவி வருகிறது ” - அமைச்சர் மா.சுப்ரமணியன்

”டெல்டாவும், ஒமைக்ரானும் சுனாமி வேகத்தில் பரவி வருகிறது ” - அமைச்சர் மா.சுப்ரமணியன்
Published on

தமிழ்நாட்டில் கொரோனா சுனாமி வேகத்தில் பரவுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டடையில் உள்ள எம்.ஐ. டி. கல்லூரியில் கொரோனாவால் பாதித்த மாணவர்கள் அனைவரும், அங்கு உள்ள மாணவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம்மானவர்களுக்காக அப்பகுதியில் இரண்டு தனிமைப்படுத்தப்படட் மையங்கள் நேற்றில் இருந்து செயல்பட்டுவருகின்றன. அவற்றை மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தற்போது நேரில் ஆய்வு செய்தனர்.

இதுவரை அந்த எம்.ஐ.டி. கல்லூரியை சேர்ந்த 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 50 பேருக்கு S Gen தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 1,446 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பட்டிருந்தது. அதில் நேற்று வரை 67 பெருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 13 பெருக்கு தொற்று மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் Web casting மூலம் - தனிமை படுத்தும் மையத்தில் உள்ள மாணவர்களிடம் அமைச்சர்கள் அதிகாரிகள் நலம் விசாரித்து வருகிறார்கள். மேலும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும்  செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினர்.

அப்போது அமைச்சர் பொன்முடி பேசுகையில், “80 பேருக்கு, கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1,659 பேர் பரிசோதனை செய்யப்பட்டது. இங்கு 41 பேர் விடுதியில் பாதிப்பில் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 39 பேர் இரண்டு கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். மொத்தம் 1,659 பேரில் 262 பேருக்கு முடிவு வரவேண்டியுள்ளது. 66 பேருக்கு S Gen உறுதியாகியுள்ளது. அரசு உத்தரவை மீறி கல்லூரிகள் நடத்தப்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார். தொடர்ந்து பிரதமர் தமிழகம் வருவது குறித்து முதலமைச்சர் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மா.சுப்ரமணியன் பேசுகையில், “ஓமைக்கிறான் வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. இன்று பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டும். டெல்டாவும், ஓமைக்கிரான் தொற்றும்இரன்டும் சுனாமி வேகத்தில் பரவி வருகிறது” என்று தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com