\
போக்குவரத்து தடை, ஊரடங்குக்கான சூழல் இப்போது இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

போக்குவரத்து தடை, ஊரடங்குக்கான சூழல் இப்போது இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

போக்குவரத்து தடை, ஊரடங்குக்கான சூழல் இப்போது இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on
ஓமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால் மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை, ஊரடங்கு ஆகியவற்றுக்கான சூழல் தற்போது இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஓமிக்ரான் வைரஸ் அதிகம் பரவும் தன்மை கொண்டது. ஆனால் அதன் வீரியம் இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் தீவிர பரிசோதனை உட்படுத்தப்படுகின்றனர். வீட்டுத் தனிமையில் வைக்கப்படுகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் அனைவரையும் கட்டாய மருத்துவமனை தனிமை செய்யும் தேவையும், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் போக்குவரத்திற்கு தடை செய்யும் அளவிற்கும் எதுவும் நடக்கவில்லை'' என்றார் அவர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com