\
மெகா தடுப்பூசி முகாம்: 24.85 லட்சம் பேருக்கு போடப்பட்ட தடுப்பூசி

மெகா தடுப்பூசி முகாம்: 24.85 லட்சம் பேருக்கு போடப்பட்ட தடுப்பூசி

மெகா தடுப்பூசி முகாம்: 24.85 லட்சம் பேருக்கு போடப்பட்ட தடுப்பூசி
Published on: 

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 3ஆவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாமில், 24 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு மெகா தடுப்பூசி முகாம்களையும் போல, 3ஆவது மெகா தடுப்பூசி முகாமிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 23 ஆயிரத்திற்கு மேற்பட்ட மையங்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதென இலக்கு நிhணயிக்கப்பட்ட நிலையில், பிற்பகல் இரண்டேகால் மணிக்கே அந்த இலக்கு எட்டப்பட்டது.

இரவு நிலவரப்படி தமிழகத்தில் 3ஆவது மெகா சிறப்பு முகாமில் பங்கேற்ற 24 லட்சத்து 85 ஆயிரத்து 814 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 14 லட்சத்து 90 ஆயிரத்து 814 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 9 லட்சத்து 95 ஆயிரம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதாக, மருத்துவத்துறை அறிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com