சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மெகா தடுப்பூசி முகாம் 

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மெகா தடுப்பூசி முகாம் 

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மெகா தடுப்பூசி முகாம் 
Published on

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 200 வார்டுகளில் மெகா தடுப்பூசி முகாம் காலை 9 மணிக்கு தொடங்கியது.

சுமார் 4 லட்சம் பேருக்கு இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவே அதிகபட்ச இலக்காகும். சென்னையை பொருத்தவரை 10 லட்சத்து 38 ஆயிரத்து 623 பேர் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்வதற்கான நாட்களை கடந்தும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை மாநகராட்சியிடம் 9 லட்சத்து 60 ஆயிரத்து 85 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த மெகா தடுப்பூசி முகாமை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களும், இரண்டாம் தவணைக்கான நாட்கள் கடந்தவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com