கொரோனா பாதிப்புக்கு மருந்து - அதிபர் ட்ரம்ப் தகவல்
உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மருந்து குறித்து தெரிய வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதன் காரணமாக சுமார் 11 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 200 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். அதிகபட்சமாக இத்தாலியில் 4000 பேர் உயிரிழந்துள்ளனர், சீனாவில் 3000 பேரும் இறந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை முற்றிலும் இல்லாமல் இருக்க மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் மருந்து குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதில் " அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தலாம். 2 மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய மாற்றத்தை மருத்துவ உலகில் ஏற்படுத்தும் என நம்புகிறேன். உடனடியாக பாதித்தவர்களின் இந்த மருந்துகளை கொடுங்கள் விரைவாக அனைவரும் நலம் பெற வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.