"ஒமைக்ரான் நோயாளிகளில் 80% பேருக்கு அறிகுறி இல்லை" - மன்சுக் மாண்டவியா

"ஒமைக்ரான் நோயாளிகளில் 80% பேருக்கு அறிகுறி இல்லை" - மன்சுக் மாண்டவியா
"ஒமைக்ரான் நோயாளிகளில் 80% பேருக்கு அறிகுறி இல்லை" - மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 80 சதவிகிதம் பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் மாண்டவியா, நாட்டில் 161 பேருக்கு ஒமைக்ரான் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 80% பேருக்கு தொற்றுக்கான எந்தக் அறிகுறியும் இல்லை என்றும், 13% பேருக்கு லேசான பாதிப்புகளே இருந்ததாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் எந்தளவுக்கு ஒமைக்ரான் தொற்றை தடுக்கிறது என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும், இதன் முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் தெரியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் பட்சத்தில் அதை சமாளிக்க ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகளுடன் மருத்துவமனைகள் தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே மகாராஷ்டிராவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 54 பேரில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com