கொரோனா வைரஸ்
மகாராஷ்டிரா: 3 மாதங்களுக்கு பின்னர் 6 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு - அச்சத்தில் மக்கள்
மகாராஷ்டிரா: 3 மாதங்களுக்கு பின்னர் 6 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு - அச்சத்தில் மக்கள்
மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாதங்களுக்கு பின்னர், வெள்ளிக்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,112 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவந்த நிலையில், மீண்டும் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் இப்போது மொத்தம் 44,765 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர், இதுவரை கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் 51,713 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று மாநில சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.
மூன்று மாதங்களுக்கு பின்னர் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் கிடுகிடுவென உயர்வதால் மக்கள் பீதியடைந்துள்ளனர், அரசும் சில மாவட்டங்களில் ஊரடங்கினை கடுமையாக்கிவருகிறது.