மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் உள்ள 10 அமைச்சர்கள் மற்றும் அம்மாநிலத்தை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் இந்தத் தகவலைக் கூறினார். மேலும் நிலவை இப்படியே மோசமாகும் பட்சத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் கட்டுப்பாடுகள் கட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று விட 50 சதவிகிதம் அதிகமாக கொரோனா பதிவாகியுள்ளது மாநிலத்தில் இன்று ஒரே நாளில் எட்டாயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த மும்பையில் 144 தடை உத்தரவு ஜனவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது நிலையில் மாலை 5 மணி முதல் கலை 5 மணி வரை பொதுமக்கள் கடற்கரை பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் ஒன்று கூடுவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com