மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் உட்பட 10 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 6 பேருக்கும், 2 மருத்துவர்கள், 2 மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் தொடர்பில் இருந்த சக மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் கொரோனோ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.