கொரோனா வைரஸ்
கேரளா சென்று திரும்பும் உள்ளூர் மக்களுக்கும் கொரோனா சான்று அவசியம்: உத்தரவு
கேரளா சென்று திரும்பும் உள்ளூர் மக்களுக்கும் கொரோனா சான்று அவசியம்: உத்தரவு
நாளை முதல் கேரளா சென்று திரும்பும் உள்ளூர் மக்களும் கட்டாயம் கொரோனா பரிசோதனைச் சான்று வைத்திருக்க வேண்டும் என கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில் எல்லைப்பகுதியோர சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில் இருந்து தமிழகம் வருவோரும் கொரோனா பரிசோதனைச்சான்று மற்றும் இபாஸ் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேராள சென்று திரும்புவோருக்கும் இனி கொரோனா பரிசோதனைச்சான்று அவசியம் என்று கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.