தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 10-க்கும் கீழே குறைந்த கொரோனா தொற்று
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 973-ல் இருந்து 962 ஆக குறைந்திருப்பதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
1,15,237 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் பாதிப்பு 962 ஆக உள்ளது. இந்நிலையில், சென்னையில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே சென்னையில் 109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 105 ஆக குறைந்துள்ளது.
கொரோனாவால் மேலும் 19 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,176 ஆக உயர்ந்துள்ளது. இதில், அரசு மருத்துவமனைகளில் 13 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்க 11,012 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 1,078 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 26,58,360 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 12 வயதிற்குட்பட்ட 68 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
கோவையில் 117 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 109 ஆகவும், செங்கல்பட்டில் 84ல் இருந்து 82 ஆகவும், ஈரோடு-69, திருப்பூர்-66, சேலம்-58, நாமக்கல்-47, தஞ்சை-37, திருவள்ளூர்-33 மற்றும் திருச்சியில் 32 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 14 மாவட்டங்களில் 10 மற்றும் அதற்கு குறைவான எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.