“கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை” - மத்திய சுகாதாரத்துறை

“கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை” - மத்திய சுகாதாரத்துறை
“கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை” - மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவடையவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். அனைவரையும் கருத்தில் கொள்ள வேண்டும். கேரளாவில் மட்டும்தான் கொரோனாவுக்கு அதிக அளவில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தேசிய அளவில் அதிகமான நபர்கள் சிகிச்சை பெறும் மாநிலங்களில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தொடர்பாக இறுதி முடிவுக்கு காத்திருக்கிறோம்.

கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் உள்ளிட்ட 44 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. 222 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. கேரளாவின் 10 மாவட்டங்கள் உட்பட 18 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது. இந்த 18 மாவட்டங்களும் 47.5% பாதிப்புகளை கொண்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com