பாலூட்டும் அன்னையரும், கொரோனா தடுப்பூசி போடலாம்: மகப்பேறு மருத்துவர் அறிவுரை

பாலூட்டும் அன்னையரும், கொரோனா தடுப்பூசி போடலாம்: மகப்பேறு மருத்துவர் அறிவுரை
பாலூட்டும் அன்னையரும், கொரோனா தடுப்பூசி போடலாம்: மகப்பேறு மருத்துவர் அறிவுரை
Published on

'பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால், தாய்ப்பால் குறையும் என்பது வதந்தியே' என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பாதிப்புகள் கிடையாது என்றும் கூறுகிறார்கள்.

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள, சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டது. ஆயினும் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் தாய்மார்களுக்கு தொடர்ந்து சந்தேகங்கள் இருக்கின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்டால் தாய்ப்பால் குறையும் என்ற அச்சமும் இளம் தாய்மார்களிடையே நிலவுகிறது. இதை போக்கும் வகையில், ' தடுப்பூசி எடுத்துக்கொள்வது தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானது' என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதுகுறித்து, மகப்பேறு மருத்துவர் சாந்தியிடம் பேசினோம். அவர், "பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அவர்களுக்கு, தடுப்பூசியால் பாதிப்புகள் இல்லை. தடுப்பூசியால் தாய்ப்பால் குறையும் என்பது வதந்தி. தடுப்பூசியால் தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்புதான் கிடைக்கும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட தாய்மார்கள், குழந்தை பிறந்து 10 நாளுக்கு தாய்ப்பால் தரக்கூடாது என்பதும் வதந்திதான். தாய் போடும் தடுப்பூசியால், குழந்தையும் பாதுகாக்கப்படும். சொல்லப்போனால் தாய் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் அதன் மூலமாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் வழியாகத்தான் குழந்தைக்கும் கடத்தப்படும். இதன்மூலம் குழந்தையும் நோயிலிருந்து பாதுகாக்கப்படும்" என்று கூறினார்.

இதுவரை பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் எந்த பின்விளைவுகளும் ஏற்பட்டதாக ஆய்வு முடிவுகள் இல்லை என்பதும் மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com