\
கொரோனாவுக்கு குன்றத்தூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு குன்றத்தூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு குன்றத்தூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
Published on

குன்றத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பாண்டி முனி(53). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

சென்னை பொழிச்சலூர் பகுதியில் வசித்து வந்த இவரது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். 1986ல் காவல் பணியில் சேர்ந்து  தற்போது T13 குன்றத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும்,  சேது பாண்டி (32) மகனும், சுதா(29) என்ற மகளும் உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com