\
கேரளா: 28 ஆயிரத்தை நெருங்கும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை

கேரளா: 28 ஆயிரத்தை நெருங்கும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை

கேரளா: 28 ஆயிரத்தை நெருங்கும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை
Published on

கேரளாவில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கேரள மாநிலத்தில் மீண்டும் அதிகரித்து வந்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும், நேற்றைய தினம் 99 பேர் உயிரிழந்துவிட்டதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவிய நாளிலிருந்து இதுவரை 27 ஆயிரத்து 765 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அரசு கூறியுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சேர்க்கப்பட்ட 172 இறப்புகளும் இதில் அடங்கும் என கேரள அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி வரை நிகழ்ந்த, போதிய ஆவணங்கள் இல்லாத 292 உயிரிழப்புகளும் இதில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com