\
கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா உறுதி

கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா உறுதி

கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா உறுதி
Published on: 

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com