\
இறந்த கொரோனா நோயாளியிடம் இருந்து நகை திருட்டு - குடும்பத்தினர் குற்றச்சாட்டு

இறந்த கொரோனா நோயாளியிடம் இருந்து நகை திருட்டு - குடும்பத்தினர் குற்றச்சாட்டு

இறந்த கொரோனா நோயாளியிடம் இருந்து நகை திருட்டு - குடும்பத்தினர் குற்றச்சாட்டு
Published on

உத்தரபிரதேச மாநிலத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளி அணிந்திருந்த நகைகள் காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இறந்த பெண்ணின் கணவர் தனது மனைவியை சர்சவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தபோது அணிந்திருந்த நகைகள் காணாமல் போய்விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுபற்றி சர்சவா மருத்துவ கல்லூரியின் முதல்வர் டிஎஸ் மர்டோலியா, யார் நகையை எடுத்தது என கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் மருத்துவமனை கொடுத்த புகாரில், செப்டம்பர் 15ஆம் தேதி அந்த கொரோனா நோயாளியை ஷாம்லி மாவட்டத்திலிருந்து கொண்டு வந்ததாகவும், சர்சவா மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்த்த ஒரே நாளில் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் அந்த பெண்ணின் உடலைக் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தபோது அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போய்விட்டதாகக் குடும்பத்தார் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடந்துவருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com