கொரோனா பாதித்த முதியவர்களை கைவிடுகிறதா இத்தாலி அரசு?

கொரோனா பாதித்த முதியவர்களை கைவிடுகிறதா இத்தாலி அரசு?

கொரோனா பாதித்த முதியவர்களை கைவிடுகிறதா இத்தாலி அரசு?
Published on

கொரோனா பாதித்த 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உயிரிழந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு இத்தாலி அரசு வந்துள்ள‌தாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தீவிர சிகிச்சை பிரிவில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இத்தாலியில் 5,090 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உள்ளன. மேலும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் படுக்கைகள் பற்றாக்குறை நிலவுவதால், 80 வயதுக்கு அதிகமானவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி‌க்க வேண்டாம் என்று இத்தாலி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான உத்தரவு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்ப அறிவியல் குழுவின் ஒப்புதலுக்கு பிறகு அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com