மூன்றாவது அலையைத் தடுப்பதும், அழைப்பதும் நம் கையில்தான் உள்ளது: உத்தவ் தாக்கரே

மூன்றாவது அலையைத் தடுப்பதும், அழைப்பதும் நம் கையில்தான் உள்ளது: உத்தவ் தாக்கரே
மூன்றாவது அலையைத் தடுப்பதும், அழைப்பதும் நம் கையில்தான் உள்ளது: உத்தவ் தாக்கரே

"மக்களின் உயிருடன் விளையாடாதீர்கள், கொரோனாவுக்கு எதிராபோராட்டத்தை தொடருங்கள். மூன்றாவது அலையைத் தடுப்பது அல்லது அழைப்பது நம் கையில்தான் உள்ளது" என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினார்.

காணொலி காட்சி மூலமாக  மருத்துவ மாநாட்டைத் தொடங்கிவைத்த உத்தவ் தாக்கரே, “கூட்டத்தைத் தவிர்க்க முடியாத இடங்களை மீண்டும் திறக்கக் கோரி அரசியல் கட்சிகள் அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கோவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஆக்சிஜன் கிடைப்பதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். வேறு எந்த நாடும் செய்யாத  அளவுக்கு தொற்றுநோயை சமாளிக்க  சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்திய ஒரே மாநிலம் மகாராஷ்டிராதான்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ம்மிடம் ஆக்சிஜன் உற்பத்தி மட்டுமே குறைவாக உள்ளது. இதனை மேம்படுத்த சிறிது காலம் எடுக்கும். தற்போது நமது தினசரி ஆக்சிஜன் உற்பத்தி சுமார் 1,200 முதல் 1,300 மெட்ரிக் டன் ஆகும். இது தொழில்துறை மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. தொழில்துறை நோக்கத்திற்காக எஃகு, கண்ணாடி மற்றும் மருந்தியல் துறைகளில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. கொரோனா அல்லாத நோயாளிகளுக்காக நமக்கு தினமும் 150 மெட்ரிக் டன் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலையின் போது மாநிலத்திற்கு தினமும் 1,700 முதல் 1,800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. அதை மற்ற மாநிலங்களில் இருந்து வாங்கினோம். மாநிலத்தின் ஆக்சிஜன் உற்பத்தியை தற்போது 1,400 மெட்ரிக் டன்னிலிருந்து 3,000 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளேன்” என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com