இந்தியாவில் இதுவரை 43 பேருக்கு கொரோனா தொற்று: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 43 பேருக்கு கொரோனா தொற்று: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 43 பேருக்கு கொரோனா தொற்று: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளா மற்றும் ஜம்முவில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மூவாயிரத்து மூன்று பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் இரண்டாயிரத்து 694 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவ அறிக்கை வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இறுதியில் இருந்து எட்டாயிரத்து 255 விமானங்களில் மூலம் இந்தியா வந்த எட்டு லட்சத்து 74 ஆயிரத்து 708 பயணிகளிடம் கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த 3பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

கேரளாவில் மூன்று வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கடந்த ஏழாம் தேதி இத்தாலியில் இருந்து கொச்சி திரும்பிய கணவன், மனைவி மற்றும் குழந்தைக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள கலம்ஷேரி மருத்துவனையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

குழந்தையின் மாதிரிகள் ஆலப்புழாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பெற்றோரின் ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். பத்தினம்திட்டாவில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை விடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com