கொரோனா: Covaxin தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதனை செய்ய அனுமதி

கொரோனா: Covaxin தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதனை செய்ய அனுமதி
கொரோனா: Covaxin தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதனை செய்ய அனுமதி

கொரோனாவுக்கு தடுப்பூசி என கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் Covaxin-ஐ மனிதர்களிடத்தில் பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் அனுமதி கொடுத்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கான மருந்தை இதுவரை எந்தவொரு நாடும் கண்டுப்பிடிக்கவில்லை. ஆனால் அதற்கான முயற்சியில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. பல நாடுகளில் முதல்கட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அனைத்தும் சோதனையில் உள்ளன. ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் பலக்கட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டிற்கு வரும். அந்த வகையில் பல கொரோனாவுக்கான மருந்துகளும் சோதனைக் கட்டத்தில் உள்ளன

இந்நிலையில் புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியான Covaxin-ஐ மனிதர்களிடத்தில் பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டதில் வெற்றி கிடைத்ததால் அடுத்தக்கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனிடையே இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகமும் இந்த பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ளது.

இந்த தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) உடன் இணைந்து உருவாக்கி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com