கொரோனா வைரஸ்
இந்தியா: நேற்றைவிட சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; புதிதாக 40,134 பேருக்கு தொற்று உறுதி
இந்தியா: நேற்றைவிட சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; புதிதாக 40,134 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை சற்று தணிந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,134 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,16,95,958 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனாவால் ஒரே நாளில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,773 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,946 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,08,57,467 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புடன் 4,13,718 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை நாடு முழுவதும் 47,22,23,639 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,06,598 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.