அமெரிக்காவை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா இந்தியாவில் நுழைந்தது!

அமெரிக்காவை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா இந்தியாவில் நுழைந்தது!
அமெரிக்காவை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா இந்தியாவில் நுழைந்தது!

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் முதல்முறையாக குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிகளவில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்திவரும், ஒமிக்ரான் மாறுபாட்டின் XXB.1.5 என்ற புதிய வகை கொரோனா, தற்போது இந்தியாவிலும் நுழைந்திருக்கிறது. ஒமிக்ரான் XXB.1.5 தொற்று, தற்போது முதல் முறையாக குஜராத்தில் மாநிலத்தில் தென்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. XBB.1.5 என்ற மற்றொரு ஒமிக்ரான் தொற்று மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்ட நிலையில், அதன் துணை மாறுபாடான XXB.1.5 தொற்று குஜராத்தில் தென்பட்டுள்ளது.

இப்போது அமெரிக்காவில் நாடு முழுவதும் 41 சதவிகித புதிய தொற்றுகள் XBB.1.5 தொற்றால் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த வாரத்தில் அங்கு பாதிப்பு இரு மடங்காக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று எண்ணிக்கை முந்தைய தினத்தை விட 44 என்றளவில் உயர்ந்து உள்ளது. கேரளாவில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தவற விடாதீர்: இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com