அதிகரிக்கப்படும் கொரோனா பரிசோதனை... குறைந்துவரும் நோய்த் தொற்று - மத்திய சுகாதாரத்துறை

அதிகரிக்கப்படும் கொரோனா பரிசோதனை... குறைந்துவரும் நோய்த் தொற்று - மத்திய சுகாதாரத்துறை
அதிகரிக்கப்படும் கொரோனா பரிசோதனை... குறைந்துவரும் நோய்த் தொற்று - மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 9 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. புதிய தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.

இந்தியாவில் செய்யப்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போதுவரை 9 கோடி பரிசோதனைகள் நாடு முழுவதும் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 11,45,015 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை செய்யப்பட்டுள்ள பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 9,00,90,122 ஆக உள்ளது.

மத்திய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் 1900-க்கும் அதிகமான ஆய்வகங்கள் நாட்டில் தற்போது செயல்படுகின்றன. இங்கு நாள்தோறும் 15 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. பரிசோதனைகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சிறப்பான முறையில் நோய் பரவல் கட்டுப்படுத்தப் பட்டிருப்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது. 

தேசிய சராசரியை விட குறைவான அளவில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை உள்ளது. 8.04 சதவீதமாக உள்ள உறுதிப்பாடு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8,26,876 ஆகும். நாட்டில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளில் இது 11.42 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74,632 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com