கொரோனா தொடர்பான கவலைகள் - ஆன்லைன் தெரபி வழங்கும் முன்னாள் ஐஐடி மாணவர்கள்

கொரோனா தொடர்பான கவலைகள் - ஆன்லைன் தெரபி வழங்கும் முன்னாள் ஐஐடி மாணவர்கள்
கொரோனா தொடர்பான கவலைகள் - ஆன்லைன் தெரபி வழங்கும் முன்னாள் ஐஐடி மாணவர்கள்

மக்களிடம் நிலவும் கொரோனா தொடர்பான கவலைகளை போக்க முன்னாள் ஐஐடி மாணவர்கள் ஆன்லைன் வழியாக இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை அளிக்கின்றனர்.

ராஜஸ்தானை சேர்ந்த முன்னாள் கரக்பூர் ஐஐடி மாணவர்களுடன் இன்னும் சிலர் இணைந்து ஆன்லைன் வழியாக மக்களிடம் கொரோனா தொடர்பான கவலையை போக்குகின்றனர். இந்தச்சேவையை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி அங்கிகரிக்கப்பட்ட உளவியல் நிபுணர்களை நியமித்து இலவசமாக செய்து வருகின்றனர். ஆன்லைன் வழியாக நடைபெறும் இந்த சிகிச்சையானது 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை நீடிக்கிறது.

இது குறித்து அந்த குழுவினருள் ஒருவரான ஷா கூறும் போது, “ இந்த சிகிச்சையை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம். ஆன்லைன் வழியாக ஒருவருக்கு, ஒருவர் என கையாளப்படும் சிகிச்சையில் இதுவரை ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் மொழிகளின் வாயிலாக 100க்கும் மேற்பட்ட நபர்கள் பலனடைந்துள்ளனர். தற்போது அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்துபலர் உதவிகேட்டுள்ளனர்.

12 பேர் கொண்ட இந்த அணி உதவிதேவைப்படும் நபர் பதிவு செய்த 24 மணி நேரத்தில், அவரை தொடர்பு கொண்டு பிரச்னையை கேட்டறிகிறது. இது மட்டுமன்றி சிகிச்சை பெற்ற நபர்களை தொடர்ந்து தொடர்பில் வைத்து அவர்களின் நிலை குறித்தும் கேட்டறிகிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com