இருவேறு கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் பலன்? ஆய்வு சொல்வது என்ன?

இருவேறு கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் பலன்? ஆய்வு சொல்வது என்ன?
இருவேறு கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் பலன்? ஆய்வு சொல்வது என்ன?

கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு வேறு தடுப்பூசிகளையும் இரு டோஸ்களாக எடுத்துக்கொள்ளும் நபருக்கு, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் கிடைப்பதாக ஐ.சி.எம்.ஆர் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒரே டோஸ் தடுப்பூசி எடுப்பவர்களை விடவும் இவர்களுக்கு கூடுதல் நோய் எதிர்ப்புத்திறன் கிடைப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு இன்னமும் கூடுதல் மதிப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டியிருப்பதாக கூறியுள்ள ஆய்வுக்குழு, “கொரோனாவுக்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கு ஆறு மாதத்துக்கு பிறகு நோய் எதிர்ப்புத்திறன் குறைவது வழக்கம். அப்படி குறைபவர்களில், ஒரே தடுப்பூசி நிறுவனத்தின் இரு டோஸ்களை எடுத்துக்கொள்பவர்களைவிடவும் - ஆறு வார இடைவெளியில் முதல் டோஸ் கோவிஷீல்டு; இரண்டாவது டோஸ் கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்களுக்கு, நோய் எதிர்ப்புத்திறன் குறையும் விகிதம் சற்று குறைவாக இருக்கிறது. அதாவது, இரு வேறு தடுப்பூசிகளை இருடோஸ்களாக எடுப்போருக்கு, அதன்மூலம் கிடைக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி நீடித்திருக்கிறது” என்று ஆய்வு சொல்கிறது.

ஐ.சி.எம்.ஆர், இந்த் ஆய்வுக்காக உத்தரப் பிரதேசத்தில் அறியாமையால் இருவேறு தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட கிராம மக்கள் சிலரை பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றனர் ஆய்வாளர்கள். அவர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு ஆறு மாதம் ஆனபிறகு, அவர்களின் கொரோனா எதிர்ப்புத்திறன் எந்தளவுக்கு இருந்தது என்பது பரிசோதிக்கப்பட்டிருந்திக்கிறது. இவர்களைப் போலவே, கோவேக்சின் / கோவிஷீல்டு தடுப்பூசிகளில் குறிப்பிட்ட ஒரு தடுப்பூசியை இரு டோஸ்களாக எடுத்துக்கொண்டோரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இருதரப்பினரிடமும் நடந்த ஆய்வில் IgG ஆன்டிபாடி எனும் நோய் எதிர்ப்புத்திறன், முதல் தரப்பினரிடம் தான் அதிகம் இருந்ததாக ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் மருத்துவர் சமிரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com