’மஞ்சள், தேநீர்..’ - இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைந்ததற்கு இதுதான் காரணம் !

இந்தியாவை பொருத்தவரை மஞ்சளை அதிகம் உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Turmeric
Turmeric Pixabay

இட்லி, தேநீர் உள்ளிட்ட உணவு வகைகளால், இந்தியாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் குறைந்ததாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும், கொரோனா வைரசால் 69 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். எனினும், மக்கள் தொகை அதிகம் உடைய இந்தியாவில், உயிரிழப்புகள் குறைவாகவே பதிவாகி உள்ளன. அதாவது மக்கள் தொகை குறைவாக உள்ள மேற்கத்திய நாடுகளைவிட மக்கள் தொகை அதிகம் இருக்கிற நாடான இந்தியாவில் உயிரிழப்பானது 5-8 மடங்கு குறைவாக இருந்தது.

இது தொடர்பாக, சுவிட்சர்லாந்து, பிரேசில், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக சேர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.

Covid
Covid Pixabay

இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இந்தியர்களின் உணவு பழக்கவழக்கங்கள் காரணமாகவே, கொரோனா உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுகளில் சைட்டோகைன் மற்றும் கொரோனா தொற்றின் தீவிரத்தன்மையை அடக்கும் கூறுகள் உள்ளன.

இந்திய டயட்டில் பெரும்பாலும் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக, இட்லி உண்பது, தேநீர் அருந்துவது, மஞ்சளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது உள்ளிட்ட காரணங்களால் இந்தியர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும், அதனால் கொரோனா உயிரிழப்புகள் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மஞ்சளில் உள்ள குர்குமினானது இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்ததில் முக்கிய பங்காற்றியிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிவப்பிறைச்சி, பால் பொருட்கல், காபி மற்றும் ஆல்கஹால் போன்றவற்றின் அதீத பயன்பாடு மேற்கத்திய நாடுகளில் கொரோனாவின் தீவிரத்தை அதிகரித்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர். மேலும் ஸ்பிங்கோலிப்பிட்கள், பால்மிடிக் அமிலம் மற்றும் இந்த உணவுகளில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் LPS போன்றவை அதிகம் இருப்பதும், சைட்டோகைன் அதிகரிப்புக்கு காரணமாக இருப்பதாக கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com