”40 இலட்சம் செலவழித்தும் மருத்துவமனையின் அலட்சியத்தால் பெற்றோரை இழந்தேன்”- இளைஞர் வேதனை

”40 இலட்சம் செலவழித்தும் மருத்துவமனையின் அலட்சியத்தால் பெற்றோரை இழந்தேன்”- இளைஞர் வேதனை
”40 இலட்சம் செலவழித்தும் மருத்துவமனையின் அலட்சியத்தால் பெற்றோரை இழந்தேன்”- இளைஞர் வேதனை
Published on

பல இலட்சங்களை செலவு செய்தும், தனியார் மருத்துவமனையின் ஊழியர்கள் என் பெற்றோரை சரியாக கவனித்துக் கொள்ளாத காரணத்தால் அவர்களை இழந்துவிட்டேன் என்று வேதனையுடன் தெலங்கானா இளைஞர் ராதேஷ் பதிவிட்ட டிவீட் வைரலாகியிருக்கிறது.

தெலங்கானா மாநிலம் மகேஸ்வரம் அருகிலுள்ள டுப்பாசெர்லா கிராமத்தை  ராதேஷ், அவரின் தாய், தந்தை மற்றும் உறவினர் ஆகியவர்கள் கொரோனோ தொற்றுக்குள்ளாகினர். இவரின் தாய், தந்தை, உறவினர் ஆகியோர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ராதேஷ் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருந்துள்ளார். ராதேஷின் உறவினர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரின் தாயும் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

 “ என் தாயின் இறுதி சடங்குகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் செய்துகொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என் அம்மா இறந்ததைக்கூட அறியாத என் தந்தை தனது டயப்பரை மாற்றிவிட என்னை போனில் அழைத்தார். உடனடியாக நான் மருத்துவமனைக்கு போன் செய்து மருத்துவமனை ஊழியர்களை என் தந்தைக்கு உதவும்படி கோரினேன். ஆனால் பல மணிநேரம் ஆகியும் அவர்கள் என் தந்தைக்கு உதவி செய்யவில்லை. எனவே மீண்டும் தந்தை என்னை அழைத்தார், பிறகு நான்  மருத்துவமனை நிர்வாகத்திடம் கடுமையாக பேசிய பிறகே தந்தைக்கு உதவினார்கள். அதன்பிறகு கடுமையான போக்குவரத்து நெரிசலை கடந்து மருத்துவமனைக்கு செல்ல நான்குமணி நேரம் ஆனது. ஆனால் நான் அங்கு செல்வதற்குள் என் தந்தையும் இறந்துவிட்டார்” என்றபடி கண்ணீர் விடுகிறார் ராதேஷ்

என் குடும்பத்தினரின் மருத்துவ செலவுக்காக இதுவரை 40 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். ஆனால் அவர்கள் மிகவும் மோசமான மருத்துவ சேவையை வழங்கினார்கள். அதனால் தான் என் குடும்பத்தினர் உயிரிழந்தனர். உயிரிழந்த என் தந்தையின் உடலைக்கூட 7.5 இலட்சம் ரூபாய் கட்டிவிட்டுத்தான் வாங்கினேன்” என்கிறார் வருத்தத்துடன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com