’’கொரோனா காலத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நியாயமற்றது’’ - கிரேட்டா தன்பெர்க்

’’கொரோனா காலத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நியாயமற்றது’’ - கிரேட்டா தன்பெர்க்

’’கொரோனா காலத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நியாயமற்றது’’ - கிரேட்டா தன்பெர்க்

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு நீண்ட நாட்களாக பல தரப்பினரின் சார்பில் மத்திய அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு வருகிறது. பலரும் இதற்கு எதிராக ட்வீட் செய்துவருகின்றனர்.

அண்மையில், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்வுகளை ஏற்பாடு செய்யும் அமைப்பும், தேசிய சோதனை நிறுவனம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது எனவும், மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வை நீண்ட நாட்களுக்கு ஒத்திவைக்கமுடியாது என்றும் கூறியது.

இந்த இரண்டு தேர்வுகளிலும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். பொறியியல் படிப்புக்கான தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் தொடங்கும் எனவும், மருத்துவ சேர்க்கைக்கு செப்டம்பர் 13 முதல் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.

தேர்வுகளை மேலும் ஒத்திவைத்தால் மாணவர்களின் வாழ்க்கை ஒரு வருடம் பாதிக்கப்படும் என ஒரு பகுதியினர் கவலைப்படுகின்றனர். மாணவர்களை பாதுகாக்க, அவர்களை தேர்ந்தெடுப்பதற்கும், சேர்ப்பதற்கும் மாற்று முறையை உருவாக்குமாறு மத்திய அரசிடம் கோரி டெல்லி கல்வி அமைச்சர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைக்கு புதிய வழிகளை கடைபிடித்து வரும்போது இந்தியாவில் அதை ஏன் கடைபிடிக்க முடியாது என்ற நோக்கத்தில் மாணவர்கள் #PostponeJEE_NEETinCOVID என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிஜிட்டல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஸ்வீடனைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான சிறுமி கிரேட்டா தன்பெர்க் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘’உலகளவில் மக்கள நெருக்கடியில் இருக்கும் இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியா மருத்துவ மற்றும் பொறியியல் தேர்வுகளான ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை நடத்தத் திட்டமிடுவது மிகவும் நியாயமற்றது. இதே நேரத்தில், இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். #PostponeJEE_NEETinCOVID என்ற இந்திய மாணவர்களின் அழைப்புக்கு நானும் என் ஒத்துழைப்பைக் கொடுக்கிறேன்’’ என்று கிரேட்டா பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com