கொரோனா வைரஸ்
கோவை: கொரோனாத் தொற்றுக்கு சுகாதாரத்துறை ஆய்வாளர் உயிரிழப்பு
கோவை: கொரோனாத் தொற்றுக்கு சுகாதாரத்துறை ஆய்வாளர் உயிரிழப்பு
கோவையில் கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த சுகாதாரத்துறை ஆய்வாளர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் மதுக்கரை, அரிசிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்த அந்த நபருக்கு வயது 56. இவருக்கு கடந்த 13 ஆம் தேதி கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் ஈ.எஸ்.ஐ.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சுவாசக் கோளாறும் சர்க்கரை நோயும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் திடீரென சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் இன்று காலை 11 மணிக்கு நஞ்சுண்டாபுரம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த சுகாதாரத்துறை ஆய்வாளருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

