ஹரியானா முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

ஹரியானா முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

ஹரியானா முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோரைத் தொடர்ந்து ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

கடந்த வாரம் முதல் அவரை சந்தித்த சகாக்கள் மற்றும் மற்ற அனைவரையும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். மேலும் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் உடனடியாக சோதனை செய்து, தங்களை சுயதனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பதிவிட்டிருக்கிறார். இதற்கு முன்பு, ஹரியானா சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தா மற்றும் மேலும் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் 2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்று தெரியவில்லை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com