\
தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா: பாதிப்பு குறித்த முழு விவரம்

தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா: பாதிப்பு குறித்த முழு விவரம்

தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா: பாதிப்பு குறித்த முழு விவரம்
Published on: 

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 772 இல் இருந்து 765 ஆக குறைந்துள்ளது என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

1,00,998 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 765 ஆக உள்ளது. சென்னையில் ஏற்கெனவே 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 118ஆக குறைந்துள்ளது.

கொரோனாவால் மேலும் 12 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,361 ஆக உயர்ந்துள்ளது. இதில், அரசு மருத்துவமனைகளில் 5 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 8,827 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், கொரோனாவில் இருந்து மேலும் 879 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,74,327 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com