ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தொற்று - ஜெர்மனியில் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தொற்று - ஜெர்மனியில் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு
ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தொற்று -  ஜெர்மனியில் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு

ஜெர்மனியில் முதன்முறையாக ஒருநாள் கொரோனா தொற்று 2 லட்சத்தை கடந்து பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து ஜெர்மனியில் கட்டாய தடுப்பூசி சட்டம் தேவைப்படுகிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது.

கடந்த வார வியாழக்கிழமை கணக்குப்படி சுமார் 1,30,400 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. தற்போது இந்த வார வியாழக்கிழமையின்போது சுமார் 69,600 பேர் கூடுதலாக மொத்தம் 2,03,136 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு கட்டாய தடுப்பூசி போட அரசு ஆலோசிக்குமா என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளது.

தற்போதுவரை ஜெர்மனியில் 75% மக்கள் தங்களின் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். இது ஐரோப்பிய மேற்கத்திய பிற நாடுகளான ஃப்ரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்றவற்றுடன் ஒப்பீட்டளவில் குறைவாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com