கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொடைக்கானலில் அடுத்த ஒருவாரம் முழு ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொடைக்கானலில் அடுத்த ஒருவாரம் முழு ஊரடங்கு
தமிழகத்தில் ஊரடங்கு அறிவித்த காலத்தில் இருந்து 100 நாட்களாக கொரோனா நோய் தொற்று இல்லாத நகராக இருந்தது கொடைக்கானல். ஆனால் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கோரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 23.07.2020 வியாழன் முதல் 29.07.2020 புதன் வரை கொடைக்கானல் நகர்முழுதும் முழு ஊரங்கு கடைபிடிக்கப்படும் என கொடைக்கானல் வணிகர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் இணைந்து நடத்திய கலந்துரையாடல் கூட்டத்திற்கு பின்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு ஊரங்கு காலத்தில் பால்மட்டும் நேரடியாக வீடுகளுக்கு சென்று விநியோகிக்க அனுமதிக்கப்படும். மருந்துக்கடை தவிர காய்கறி மளிகைக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்படும். இதனால் பொதுமக்கள் ஒருவாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள ஏதுவாக இன்றும் நாளையும் இரவு எட்டுமணி வரை கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.