குணமடைய வாழ்த்துடன் பழக்கூடை பரிசு - கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் மே.வங்க அரசு

குணமடைய வாழ்த்துடன் பழக்கூடை பரிசு - கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் மே.வங்க அரசு

குணமடைய வாழ்த்துடன் பழக்கூடை பரிசு - கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் மே.வங்க அரசு
Published on

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் 'விரைவில் குணமடையுங்கள்' என்ற வாழ்த்து அடடையுடன் பழக்கூடை வழங்கி வருகிறது மேற்கு வங்க அரசு.

மேற்கு வங்காள மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகின்றன. மாநிலத்தில் கொரோனா பாதித்த 2,075 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டியளித்தார். ''மாநிலத்தில் மொத்தம் 403 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. கொரோனா பாதிப்பு விகிதம் 23.17% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.18% ஆகவும் உள்ளது. 19,517 படுக்கைகள் தயாராக உள்ளன. மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை முடிவு கட்டாயம். அடுத்த 15 நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை'' என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் 'விரைவில் குணமடையுங்கள்' என்ற வாழ்த்து அட்டைகளுடன் பழக்கூடை வழங்கி வருகிறது மேற்கு வங்க அரசு. இதற்கான விநியோகிக்கும் பணிகளை கவுன்சிலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சுமார் 10,000 பழக்கூடைகள் தயார் செய்யப்பட்டு, கொல்கத்தா முழுவதும் விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com