பொதுஇடங்களில் கூட்டம் கூடினால் 3 ஆம் அலை நிச்சயம்: இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை

பொதுஇடங்களில் கூட்டம் கூடினால் 3 ஆம் அலை நிச்சயம்: இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை

பொதுஇடங்களில் கூட்டம் கூடினால் 3 ஆம் அலை நிச்சயம்: இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை
Published on

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மூன்றாம் அலை உருவாவதை தடுக்க முடியாது என இந்திய மருத்துவக் கழகம் எச்சரித்துள்ளது.

அவசியம் இன்றி பொதுஇடங்களில் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்படும் நிலையில், மக்கள் அதை பொருட்படுத்தாமல் கூட்டமாக திரள்வதாக இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளது.

பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் மக்கள் சுற்றுலா, புனித யாத்திரை என பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதாகவும், அதைத் தவிர்த்திடுமாறும் இந்திய மருத்துவக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா அச்சத்தை மறந்து மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com