\
தடுப்பூசிகள் விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட இபிஎஸ் வலியுறுத்தல்

தடுப்பூசிகள் விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட இபிஎஸ் வலியுறுத்தல்

தடுப்பூசிகள் விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட இபிஎஸ் வலியுறுத்தல்
Published on: 

தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் போடப்பட்ட தடுப்பூசிகள் விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிடுமாறு மாநில அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். மத்திய அரசால் கடந்த 2 மாதத்தில் தமிழ்நாட்டிற்கு எத்தனை தடுப்பூசிகள் வழங்கப்பட்டது, அவை எத்தனை பேருக்கு போடப்பட்டது, யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது, மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தடுப்பூசிகள் எத்தனை என்பது உள்ளிட்ட தகவல்களை வெள்ளை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி விஷயத்தில் மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவதை விடுத்து மக்களை காப்பாற்றும் பணியில் இந்த அரசு கவனம் செலுத்தவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com