ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறி நோயாளியைக் காப்பாற்றிய மருத்துவர்

ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறி நோயாளியைக் காப்பாற்றிய மருத்துவர்
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறி நோயாளியைக் காப்பாற்றிய மருத்துவர்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மோசமான நிலைக்குச் சென்ற முதியவரைக் காப்பாற்ற 30 வயது மருத்துவர் ஆம்புலன்ஸை தானே ஓட்டிச் சென்ற சம்பவம் புனேயில் நடந்துள்ளது.


புனேயில் பார்வதி பகுதியில் சொந்தமாக மருத்துவமனை வைத்து நடத்திவருகிறார் டாக்டர் ரஞ்சித் நிக்கம்(30 வயது). இவருடைய மருத்துவமனையில் அங்குள்ள மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு 71 வயது முதியவரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த முதியவருக்கு திங்கட்கிழமை இரவு 2 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே வேறு ஒரு பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்திருக்கின்றனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உடல்நலக்குறைவால் வர இயலவில்லை என தெரிந்ததும், 108 ஆம்புலன்ஸிற்கு அழைத்திருக்கின்றனர். தொடர்புகொள்ள முடியாமல்போகவே மற்றொரு மருத்துவர் ராஜேந்திர ராஜ்புரோஹித் உதவியுடன் மருத்துவரான நிக்கம் தானே ஆம்புலன்ஸை ஓட்ட முன்வந்திருக்கிறார்.

சில மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் இடம் இல்லாமல் போகவே ஒவ்வொரு மருத்துவமனையாக மாறி கடைசியாக ஒரு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

நிக்கமின் மருத்துவமனைக்குச் சென்ற அந்த முதியவரின் மகன், ஆம்புலன்ஸை ஓட்டியது மட்டுமல்லாமல் கடைசியாக ஒரு மருத்துவமனையில் சேர்த்து தனது அப்பாவின் உயிரையும் காப்பாற்றி இருக்கிறார் டாக்டர் நிக்கம் எனக் கூறியுள்ளார். மேலும் அந்த முதியவர் இப்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com