கையுறைகளால் வியர்த்து சுருங்கிப்போன மருத்துவரின் கைகள் - சேவையை பாராட்டும் நெட்டிசன்கள்!

கையுறைகளால் வியர்த்து சுருங்கிப்போன மருத்துவரின் கைகள் - சேவையை பாராட்டும் நெட்டிசன்கள்!

கையுறைகளால் வியர்த்து சுருங்கிப்போன மருத்துவரின் கைகள் - சேவையை பாராட்டும் நெட்டிசன்கள்!
Published on

கையுறைகளால் ஈரமான மருத்துவரின் கை - சேவையை பாராட்டும் நெட்டிசன்கள்

2020 அனைவருக்குமே மிகவும் கடினமான வருடமாக இருக்கிறது. குறிப்பாக சுகாதரத் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு கொரோனா சமூகப்பரவல் பெரும் சவாலாகவே உள்ளது. தற்போது நிலவிவரும் காலநிலையில் தங்களைப் பாதுகாக்க அணியும் உபகரணங்கள் மேலும் சிரமமாகவே இருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் சையத் பைசான் அகமது PPE கிட் பாதுகாப்பு கையுறைகளால் தனது கைகள் ஈரமாகி, சுருங்கி இருப்பதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ‘’மிகவும் ஈரப்பதமான இந்த காலநிலையில் #PPE கிட்டை எடுத்தபின் வியர்த்து சுருங்கிப்போன எனது கைகள்’’ என்று அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த PPE கிட் அணியும் அனைவருக்குமே இதேநிலைதான்.

டாக்டர் அகமதுவின் இந்த ட்வீட்டிற்கு 23 ஆயிரம் லைக்குகளும், 3,900 ரீட்வீட்டுகளும் வந்து வைரலாகி உள்ளது. இதுபோன்ற கடினமாக காலங்களில் உறுதியுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு நன்றி என நெட்டிசன்கள் பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.

’’உங்களைப் போன்றவர்கள் மேற்கொள்ளும் அற்புதமான முயற்சிகளைப் பார்க்கும்போது வார்த்தைகள் எழவில்லை. மனிதநேயம் எப்போதும் உங்களுக்கு கடன்பட்டிருக்கும்’’, ’’இதை பார்க்கிறவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடித்தால், இவர்களுக்கு அழுத்தம் குறையும். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்’’ என்பது போன்ற நிறைய கமெண்ட்டுகளையும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com