கருப்பு பூஞ்சைக்கு அச்சம் வேண்டாம்... எச்சரிக்கை அவசியம் - மருத்துவர் காமேஸ்வரன்

கருப்பு பூஞ்சைக்கு அச்சம் வேண்டாம்... எச்சரிக்கை அவசியம் - மருத்துவர் காமேஸ்வரன்
கருப்பு பூஞ்சைக்கு அச்சம் வேண்டாம்... எச்சரிக்கை அவசியம் - மருத்துவர் காமேஸ்வரன்

கருப்புப் பூஞ்சை பாதிப்பு தொடக்கத்திலேயே கண்டறிந்தால் சரிசெய்யக்கூடியதே என்று காது, மூக்கு, தொண்டை நிபுணர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கருப்புப்பூஞ்சையை பற்றி அச்சம் வேண்டாம் ஆனால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கருப்புப் பூஞ்சை நோய் ஏற்கனவே உள்ள நோய்தான். கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவந்தவர்களை அதிகம் தாக்குவதால், நோயெதிர்ப்பு சக்தி குறைவால் கருப்புப் பூஞ்சை வருகிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கண், முகத்தில் வலி இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்கு வந்தால் சரி செய்யக்கூடியதுதான். கருப்புப் பூஞ்சை நோய்க்கு மருந்துகள் உள்ளதால் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்திவிடலாம் என்று அவர் கூறினார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com