திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா உறுதி !
சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்குத் தொற்று ஏற்பட்டு இருப்பது இதுவே முதல்முறை.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,286 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25, 872 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 4வது நாளாக இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,012 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 17,598 ஆக உயர்ந்துள்ளது.