இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று
Published on

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்துக்கான ப்ரமோஷன் வேலைகளில் மணிரத்னம் கடந்த சில தினங்களாகவே தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்த 8-ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, சரத்குமார், விக்ரம் பிரபு, சுஹாசினி, ஜெயமோகன், ரவி வர்மன், தோட்டா தரணி, ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொன்னியின் செல்வன் பட ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது படக்குழுவினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த ஜூலை 8-ம் தேதி, `பொன்னியின் செல்வன்’ படக்குழுவில் இருந்து நடிகர் விக்ரம் நெஞ்சுப்பகுதியில் ஏற்பட்ட அசௌகரியத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் டிஸ்சார்ஜ் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com