டெல்டா வகையைவிட அச்சுறுத்தும் டெல்டா பிளஸ் கொரோனா: உலக நாடுகள் அச்சம்

டெல்டா வகையைவிட அச்சுறுத்தும் டெல்டா பிளஸ் கொரோனா: உலக நாடுகள் அச்சம்
டெல்டா வகையைவிட அச்சுறுத்தும் டெல்டா பிளஸ் கொரோனா: உலக நாடுகள் அச்சம்

டெல்டா வகை கொரோனா வைரஸின் மற்றொரு உருமாற்றமான டெல்டா பிளஸ் எனும் திரிபு, அதிவேகமாக பரவி வருவதும், அதற்கு எதிராக தடுப்பூசிகள் குறைவான எதிர்ப்பு திறனை கொடுப்பதும் உலக நாடுகளையும், மருத்துவ நிபுணர்களையும் அச்சம் கொள்ள வைத்துள்ளது

கடந்த ஆண்டு செப்டம்பரில் மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்ட B.1.617.2 என்கிற டெல்டா என உருமாறிய வைரஸ், 2-ஆவது அலையில் இந்தியாவில் 70% தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரான்ஸ் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தில் பரவிய ஆல்பா வகை வைரஸை விட டெல்டா வகை வைரஸ்கள் பரவும் வேகம் 60% அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளன.

இந்த டெல்டா வகை வைரஸ் தற்போது மேலும் மரபணு ரீதியிலான உருமாற்றம் அடைந்து "டெல்டா பிளஸ்" என்ற வைரஸாக பரவி வருகிறது. பரவும் வேகம், பாதிப்பு ஏற்படுத்துவது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருக்குலைப்பது என டெல்டா பிளஸ் பரவுதல்  மிகுந்த அச்சம் தருவதாக இருப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

தற்போது வரை 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி, டெல்டா பிளஸ்க்கு எதிராக குறைந்த வீரியத்துடன் செயல்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பைசர், கோவிஷீல்ட் போன்றவை டெல்டா வைரஸ்க்கு எதிராக ஒரு டோஸ் செலுத்தியவர்களுக்கு 33% எதிர்ப்பு திறன் மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மூன்றாவது அலை வருவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல மாநிலங்களில் தற்போதே எடுக்கப்பட்டு வரும் நிலையில் டெல்டா குடும்ப வைரஸ் மூலம் மூன்றாவது அலையின் பரவல் இருப்பின், இழப்புகள் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com