நாடெங்கும் தினசரி கொரோனா தொற்று 2ஆவது நாளாக குறைவு

நாடெங்கும் தினசரி கொரோனா தொற்று 2ஆவது நாளாக குறைவு

நாடெங்கும் தினசரி கொரோனா தொற்று 2ஆவது நாளாக குறைவு
Published on

நாடெங்கும் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி 3,33,533 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 46,393 பேரும் கேரளாவில் 45,136 பேரும் கர்நாடகாவில் 42,470 பேரும் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். தொற்று அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4ஆவது இடத்தில் உள்ளது. நாடெங்கும் 2,59,168 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 21,87,205ஐ தொட்டுள்ளது. இதுவரை 161கோடியே 47 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com