தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 1,900க்கும் கீழ் தினசரி கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1,900க்கும் கீழ் தினசரி கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் நேற்று 1851 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,804 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,50,724 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,804ஆக உள்ளது. சென்னையில் ஏற்கெனவே 205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 209ஆக உயர்ந்திருக்கிறது. 12 வயதுக்குட்பட்ட 107 சிறார்களுக்கு கோரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனாவால் இன்று 32 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,579ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 22 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 4 பேர். 50 வயதுக்குட்பட்டோர் 3 பேர். ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 23ஆக இருந்த நிலையில் தற்போது 32ஆக அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20,225ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,917 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,37,632 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.