மீண்டும் கொரோனா பரவல் : புனேவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மீண்டும் கொரோனா பரவல் : புனேவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மீண்டும் கொரோனா பரவல் : புனேவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மகாராஷ்ட்ராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புனேவில் வரும் 28ஆம் தேதி வரை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 74 சதவீதத்துக்கும் மேலான பாதிப்பு கேரளா மற்றும் மகாராஷ்ட்ராவிலேயே பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவையை தவிர ஹோட்டல்கள், ரெஸ்ட்டாரென்ட்டுகள், கடைகளை இரவு 10 மணிக்குள் அடைக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புனேவில் பள்ளி - கல்லூரிகளுக்கு வரும் 28 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மகாராஷ்ட்ரா சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும் போது, “ முகக் கவசம், தனிமனித இடைவெளி என கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைபிடிக்காததால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் நம்மை சுற்றியே உள்ளதால் மெத்தனமாக இருப்பது ஆபத்து. பொது முடக்கம் கொண்டுவருவது குறித்து எந்தத் திட்டமும் இல்லை. கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் “ என்று கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com