மீண்டும் பரவும் கொரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

மீண்டும் பரவும் கொரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை
மீண்டும் பரவும் கொரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை தடுப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தியாவின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை ஏற்படவுள்ளதாக மத்திய குழு எச்சரித்துள்ளது. தொடர்ந்து ஆறாவது நாளாக நேற்று நாடு முழுவதும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூஷன் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி லாக்டவுன் போன்ற நடவடிக்கைகள் நோய் பரவலை தடுக்க உதவவில்லை எனக் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் என அவர் ஆலோசனை அளித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று நண்பகல் 12:30 மணியளவில் காணொலி காட்சி வழியாக இந்த ஆலோசனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பலமுறை முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி கடைசியாக கடந்த ஜனவரியில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்குவதற்கு முன்பு ஆலோசனை நடத்தியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com