தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த புற்றுநோயாளி உயிரிழப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Hospital
Hospitalpt desk

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் 5 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், பார்த்திபன் (55) என்ற நுரையீரல் புற்றுநோயாளியொருவர், கடந்த 15 நாட்களாக கொரோனா சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Thoothukudi govt hospital
Thoothukudi govt hospital

இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவக்குமாரிடம் நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “பார்த்திபன் கேன்சர் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்து, பின் அதற்கு சிகிச்சை தரப்பட்டது.

இந்நிலையில் இவர் இறந்துள்ளார். கொரோனாவால் அவர் இறந்துள்ளதால், தூத்துக்குடி மாநகராட்சி மூலமாக அரசின் வழிகாட்டுதலின்படி அவரது உடல் அடக்கம் செய்யப்படும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com