கொரோனா வைரஸ்
கொரோனா கால மகத்துவர்: இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் ஆட்டோ ஓட்டுநர் யூசுஃப்!
கொரோனா கால மகத்துவர்: இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் ஆட்டோ ஓட்டுநர் யூசுஃப்!
போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் நோயாளிகளை, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இலவசமாக அழைத்துச் செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
பரமக்குடியைச் சேர்ந்த முஹமது யூசுஃப், கடந்த 13 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றார். கொரோனா முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், முஹமது யூசுஃப் கைபேசிக்கு அழைத்தாலோ, நோயாளிகள் வாகனத்திற்காகக் காத்திருந்தாலோ, தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச்சென்று மருத்துவமனைகளில் இறக்கி விடுகிறார்.
கடந்த ஆண்டு பொதுமுடக்க காலத்திலும் இந்தச் சேவையைச் செய்திருக்கிறார் முஹமது யூசுஃப். பரமக்குடி மக்கள் பலரும் இவரது சேவையை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.